சற்று முன்

தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா ! | Toyota Kirloskar Motor Enhances Education and Healthcare Infrastructure in Raichur under its CSR Prog ! | Marriott Hotels Debuts in Udaipur, Blending Timeless Charm, Cultural Heritage and Contemporary Elegance at Udaipur Marriott Hotel ! | ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி ! | Samsung Launches Galaxy M56 5G, Segment’s Slimmest Smartphone in India ! | குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது ! | டால்மியா பாரத் அறக்கட்டளை 77 DIKSHa யிற்சியாளர்களுக்கான பாராட்டு விழாவை டால்மியாபுரத்தில் ஏற்பாடு செய்துள்ளது ! | கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு ! | விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது ! | தக் லைஃப் - முதல் பாடலை கமல் ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா வெளியிட்டார்கள் ! | 20 - ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சச்சின் ! | முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார்* - இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் ஆவேசம் ! | சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா ! | கேங்கர்ஸ்” பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி ! | 45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ! | 10 ஹவர்ஸ் திரை விமர்சனம் ! | நாங்கள் திரை விமர்சனம் ! | அம்..ஆ திரை விமர்சனம் ! | Marvel Studios Releases The Trailer For “The Fantastic Four: First Steps” ! | இண்டஸ் டவர்ஸின் ஸ்மார்ட் வகுப்பறைகள் இந்திய நிலப்பரப்பின் தெற்கு முனையை அடைகின்றன ! | சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்"பேடிங்டன் இன் பெரு" ! | மிஸ் மேல கிரஷ் ' வீடியோ ஆல்பம் வெளியீடு ! | சென்னையில் நீரிழிவு நோயின் பரவல்: ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை ! | Kauvery Hospital releases data on the Diabetes Prevalence in Chennai through a cross sectional study ! | ஏலேலோ இசை ஆல்பம் ட்ரீம்ஸ் வெளியீட்டு விழா !


மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன் !

 

மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன்.


முன்னணி தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே. 

பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த  லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சினிமாவில் வந்த பிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் தான், உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும், அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா என்றும் கேட்டனர். 

இக்கேள்விக்கு பதில் அளித்த அவர், "மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்" என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய லெஜெண்ட் சரவணன், "சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன்," என்று கூறினார். 


நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்றும், நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர் என்றும் லெஜெண்ட் சரவணன் கூறினார்.  

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். 


கருத்துகள் இல்லை