கஸ்டடி உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது !
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும் நாகசைதன்யா, வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான 'கஸ்டடி' உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது.
நாக சைதன்யா மற்றும் திறமையான இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்- தெலுங்கு பைலிங்குவல் படமான 'கஸ்டடி' மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். மிகப்பெரிய அளவிலான இந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கிறார். படத்தை பவன் குமார் வழங்குகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
நாகசைதன்யா பிறந்தநாளன்று படக்குழு படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டனர். போலீஸ் அதிகாரியாக நாகசைதன்யாவின் இந்த அதிரடியான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இப்போது உலகம் முழுவதும் 'கஸ்டடி' திரைப்படம் மே மாதம் 13,2023-ல் நீண்ட கோடை விடுமுறையை திட்டமிட்டு வெளியிட இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாக இருக்கிறது.
அரவிந்த்சாமி படத்தில் வில்லனாக நடிக்க ப்ரியாமணி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையின் லெஜண்ட்டான அப்பா- மகன், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர்.
நடிகர்கள் :- நாக சைதன்யா, கிரீத்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி, சம்பத் ராஜ், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர்.
படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:
கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா,
வசனம்: அபூரி ரவி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா - D'One,
டிஜிட்டல் மீடியா: விஷ்ணு தேஜ் புட்டா
கருத்துகள் இல்லை