சற்று முன்



'வாரிசு' படத்தின் முழு பாடல் எப்போது தெரியுமா?!



இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.

நீண்ட நாட்களாக படத்தின் முதல் சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்று காலை மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்தது வாரிசு படக்குழு. அதாவது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ நேற்று  மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் அப்பாடலை விஜய் மற்றும் மானசி எம்எம் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியிருக்கிறார். எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது. முழுப்பாடல் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை