தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து !
*தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!*
டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார்.
G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில் முடித்துவிட்டு அங்கே தற்போது முன்னனி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு மகள்களது திருமணமும் இந்த வருடம் நவம்பர் - டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
G. தனஞ்ஜெயன் அவரது மூத்த மகளான ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022 அன்று அபிஷேக் குமாருடன் அம்பத்தூரில் உள்ள PSB கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பிரபல பேச்சாளருமான சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார்.
*திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்:*
*முன்னணி தயாரிப்பாளர்கள்:*
கலைப்புலி எஸ். தாணு, ‘சூப்பர் குட்’ ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்புசெழியன், அபிராமி ராமநாதன், டி.ஜி. தியாகராஜன், பிரமிட் நடராஜன், T. சிவா, K.E. ஞானவேல்ராஜா, PL. தேனப்பன், புஷ்பா கந்தசாமி, கதிரேசன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்ஷ்மணன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கமல்போஹ்ரா, பி. பிரதீப் மற்றும் பலர்.
*முன்னணி இயக்குநர்கள்*:
கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், ‘சிறுத்தை’ சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனு ராமசாமி, மோகன் ராஜா ஃ லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதாமோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், கருணாகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, அருண் வைத்யநாதன், பாலஜி குமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா, கவுரவ் நாராயணன், ஆர். கண்ணன், மிலிந்த் ராவ், ஆண்ட்ரூ லூயிஸ், கேபிள் சங்கர் மற்றும் பலர்.
*முன்னணி நடிகர்கள்:*
விஜய் ஆண்டனி, கெளதம் கார்த்திக், சிபி சத்யராஜ், மனோபாலா, சுஹாசினி, ரோகினி, லிசி, பிரசன்னா, சிநேகா, ஆர்.கே. சுரேஷ், சச்சு, தியாகராஜன், பிரசாந்த், நகுல், சதீஷ், கணேஷ் வெங்கட்ராம், குட்டி பத்மினி, விதார்த், நட்டி, பஞ்சு சுப்பு, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சிதார்த்தா சங்கர், அஷ்வின் காக்குமனு, கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ், சுரேஷ் ரவி, VJ ரம்யா, விச்சு மற்றும் பலர்.
இவர்கள் மட்டுமல்லாது, ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாடகர்கள் என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூடி திருமண நிகழ்வில் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.
D'One அணியின் சுரேஷ் சந்திரா மற்றும் நாசர் தலைமையில் பிரபலங்கள் இந்த நிகழ்வுக்காக ஒருங்கிணைந்து கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை