அமெரிக்க நாட்டில் பணி நியமனம்- எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு
எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரி மாணவர்கள் அதிக ஊதியத்தில் அமெரிக்க நாட்டில் பணி நியமனம்- எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரியில் படித்து முதுகலை பட்டம் பெற்ற 15 பட்டதாரிகள் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள எட் தியரி (Ed theory) என்கிற வேலைவாய்ப்புக்கான மனித வள வேலைவாய்ப்பு கம்பெனி மூலமாக தெற்கு கலிபோர்னியாயாவில் உள்ள பள்ளிகள், குழந்தைகள் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ₹ 58 லட்சம் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்துரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்
எஸ் ஆர் எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரி 1996 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நாட்டில் இரண்டாவதாக தொடங்கப்பட்ட கல்லூரியாகும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த கல்லூரியில் பயின்று கடந்த கல்வி ஆண்டில்(2022) முதுகலை பட்டம் பெற்ற 15 முதுகலை பட்டதாரிகள் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகள், குழந்தைகள் மருத்துவமனைகளில் அதிக ஊதியத்துடன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இக்கல்லூரியில் படித்தவர்கள் ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஐயர்லாந்து, கனடா,சிங்கப்பூர், மலேசியா, நியூஸிலாந்து, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியில் உள்ளனர்.
கலிபோர்னியாவில் இயங்கி வரும் எட் தியரி (Ed theory) என்கிற வேலைவாய்ப்புக்கான மனித வள வேலைவாய்ப்பு கம்பெனி அங்குள்ள பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு தேவையான திறமையான பல்வேறு பிரிவில் பட்டதாரிகளை சர்வதேச அளவில் குழு கலந்துரையாடல் மூலமாக தேர்வு செய்து அளித்து வருகிறது.
அதன்படி காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பு பயின்று முதுகலை பட்டம்(2022) பெற்ற 15 மாணவ மாணவியர்களான ஜி. பிரியா, ஏ. ஷபானா, கோபிகா நாத், எஸ். பூபாளம், ஏ. ஏ. மார்க், அந்தோணி விக்டர் பேட்ரிக், நஸ்ரின் பாத்திமா, சூசன் டியோ, எஸ். ஹேமா, பி. நிவோதினி, எஸ். அஸ்மாத் ஜஹான், ஆர். சோனியா, ஜெஸ்லின் பிரீடா,எஸ். சிவப்ரியா, சில்பாஸ்ரீ கமார்க் ஆகியோர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள எட் தியரி (Ed theory) என்கிற வேலைவாய்ப்புக்கான மனித வள வேலைவாய்ப்பு கம்பெனியின் வேலை வாய்ப்பு உதவி மேலாளர் ஜிம் ஜார்ஜ் நடத்திய கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகளுக்கான தேவையான ஆள் தேர்வு மூலமாக எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரி முதுகலை பட்டதாரிகள் 15 பேரையும் தேர்வு செய்தார்.
இவர்கள் ஆண்டுக்கு 70,000முதல் 72,000 அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ₹58, லட்சம் ) என்ற அதிக ஊதியத்துடன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனர் என்றார் மேலும் ஆகுபஷனல் தெரபியாவில் நாட்டிலேயே எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரியில் மட்டுமே பி.எச்டி ஆராய்ச்சி பட்ட படிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரி குறிப்பாக குழந்தைகளுக்கான கிளினிக்கல்,பேச்சு பயிற்சி,
நரம்பு அறிவியல் , முடக்கு நீக்குதல் உள்ளிட்டவை பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் நாட்டிலேயே சிறப்பு ஆட்டிசம் மையம் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டில் அதிக ஊதியத்துடன் பணி நியமனம் பெற்றுள்ள எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரி மாணவர்களை எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி. பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை பதிவாளர் முனைவர் டி. மைதிலி, வேலைவாய்ப்பு இயக்குனர் வெங்கட சாஸ்திரி,எஸ்ஆர்எம் தொடர்புத்துறை இயக்குனர் ஆர். நந்தகுமார், எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபிய கல்லூரி டீன் முனைவர் கணபதி சங்கர், வேலைவாய்ப்பு முதுநிலை மேலாளர் எஸ். வெங்கடாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை