இந்தியாவின் சென்னை மாநகருக்கு வெற்றிகரமான விமான சேவையில் ஒரு ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் ஜஸீரா ஏர்வேஸ்
இந்தியாவின் சென்னை மாநகருக்கு வெற்றிகரமான விமான சேவையில் ஒரு ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் ஜஸீரா ஏர்வேஸ்
ஒவ்வொரு வாரமும் ஐந்து விமான சேவைகள் இயக்கப்படுகின்றன
குவைத்திற்கு ஒரு வழி விமானக் கட்டணம் ரூ.18,296/- ல் ஆரம்பம்
இஸ்தான்புல், பாகு, திபிலிசி, கெய்ரோ, அம்மான், ஜித்தா, மதீனா, ரியாத், தம்மாம், அபா, காசிம் மற்றும் துபாய் ஆகிய நகரங்களுக்கு இணைப்பு வசதிகள்
பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் குவைத்தின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக ஜஸீரா ஏர்வேஸ் இயங்கி வரும் நிலையில், இந்தியாவின் சென்னை மாநகருக்கு அதன் விமான சேவையை தொடங்கி ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்திருக்கிறது. இத்தருணத்தில் தனது வர்த்தக பார்ட்னர்கள் தொடங்கி வழங்கி வரும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை ஜஸீரா ஏர்வேஸின் நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளவிருக்கிறது. 2022 நவம்பர், 2-ம் தேதியன்று சென்னை மாநகரில் நடைபெறுகின்ற ஒரு சீர்மிகு விழாவில் முதன்மையான 10 பயண முகமை நிறுவனங்கள் கௌரவிக்கப்படவுள்ளன. சிறப்பான பங்களிப்பிற்காக அந்நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும் இவ்விழாவில் நடைபெறும்.
ஜஸீரா ஏர்வேஸின் தெற்காசியாவிற்கான பிராந்திய மேலாளர் ரோமனா பார்வி இதுபற்றி கூறியதாவது: “குவைத்திலிருந்து இந்தியாவிற்கும் மற்றும் இந்தியாவிலிருந்து குவைத்திற்கும் மற்றும் அதனைக் கடந்தும் உள்ள பிற அமைவிடங்களுக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களை அழைத்துச் செல்லும் விமான சேவைக்காக ஒவ்வொரு வாரமும் இரண்டு விமான சேவைகளை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகருக்கு இயக்குவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். பொழுதுபோக்கு மற்றும் புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் எமது மதிப்புமிக்க இந்தியப் பயணிகளுக்கு இச்சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.”
2017-ம் ஆண்டு அக்டோபரில் ஹைதராபாத்திற்கு விமானத்தை இயக்கியதன் மூலம் தனது இந்திய இயக்கச் செயல்பாடுகளை ஜஸீரா ஏர்வேஸ் தொடங்கியது. அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 5 முதல் 8 அமைவிடங்களுக்கு விமான சேவையை வழங்கும் அளவிற்கு விரைவான வளர்ச்சியை இது கண்டிருக்கிறது. தற்போது இந்தியாவிலிருந்து குவைத்திற்கும் மற்றும் அதைக் கடந்து பிற அமைவிடங்களுக்கும் 30 நேரடி விமான சேவைகளை இந்நிறுவனம் இயக்கி வருகிறது.
குவைத்திலிருந்து சென்னைக்கு வரும் ஜஸீரா ஏர்வேஸின் விமானங்கள் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 17:20 மணிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படுகின்றன. சென்னையிலிருந்து குவைத்திற்கு திரும்பச் செல்லும் விமானங்கள் இந்திய உள்ளூர் நேரப்படி காலை 1.30 AM மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுகின்றன.
கருத்துகள் இல்லை