யூகி திரைப்படம் திரைவிமர்சனம்
யூகி” திரைப்படமும் வாடகைதாயை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குனர் லாக் ஹரிதாஸ் இயக்க ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி மற்றும் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.கதாநாயகனான கதிர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படமானது தமிழ் மலையாளம் என்று இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கதிர், நரேன், நட்டி போன்றவர்களை சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் ஜான் விஜய் மற்றும் வினோதினி வைத்தியநாதன் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இடைவெளி முடிந்து கதிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதையானது நகர்கிறது, இப்படத்தை எடுத்திருந்த இயக்குனர், படத்தின் கதாபாத்திரங்களை கட்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், நட்டி கதாபாத்திரம் செய்யும் செயல்கள் குழப்பமாகவே இருந்தது இவர் யார் என்று தெரியும் போது அவரின் கதாபாத்திரம் ஈர்ப்பை ஏற்படுத்திதயது.
இப்படத்தின் இயக்குனர் 2 மணிநேரம் 11 நிமிடங்களில் படத்தை கட்சிதமாக எடுத்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. மேலும் கடைசி வரையிலும் இவர் தான் குற்றவாளி என்ற சந்தேகம் பாடத்தை பார்ப்பவர்களுக்கு வரவில்லை. பெண் கதாபாத்திரங்களான பவித்ரா லட்சிமி மற்றும் கயல் ஆனந்தியை நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் கதாபாத்திரங்களில் இருந்தது மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் பிடித்தவர்கள் இப்படத்தினை விரும்புவார்கள்.
படத்தில் வரும் ட்விஸ்ட் நன்றாக இருந்தது.
சமுதாயத்திற்கு தேவையான படம்.
Rating 3.5 / 5
கருத்துகள் இல்லை