எல்லாம் அவன் செயல் திரைப்பட நடிகர் ஆர்.கே வீட்டில் நகை கொள்ளை!,
'எல்லாம் அவன் செயல்’ திரைப்பட நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை!*,
சென்னையில் திரைப்பட நடிகர் ஆ.கே. வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'எல்லாம் அவன் செயல்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன். இவரது வீடு சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிபன்ஸ் காலனி, 12வது குறுக்கு தெருவில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டில் அவரது மனைவி ராஜா என்பவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது திறந்திருந்த பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்த 3 பேர், கூர்மையான ஆயுதத்தை காட்டி மிரட்டி, அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த சுமார் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு நேரில்சென்ற அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நேபாளிகள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை