சற்று முன்



என்ன தான் கதை ? இந்த காலங்களில் அவள் வசந்தம்.... விமர்சனம்

என்ன தான் கதை ? இந்த காலங்களில் அவள் வசந்தம்.... விமர்சனம்





விமர்சனம்...... 

அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.

அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இளைஞர்களை கவரும் விதமாக படத்தை நல்லா கலர்ஃபுல் ஆகவும் இளமை ததும்பும் படியும் இயக்கி உள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் என்பது தெளிவாகவே தெரிகிறது. 

படத்தில் ஏகப்பட்ட இடங்களில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளன ராகம் படத்தின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஒரு இடத்தில் மெளனராகம் படத்தில் கார்த்தி பேசிய வசனத்தையே அழகாக வைத்திருப்பது இயக்குநரின் திறமை என்று தான் சொல்ல வேண்டும்.

ஹிரோஷினியின் ஹாசினி சிண்ட்ரோம் படத்தில் பெரிதாக ஒட்டவில்லை என்பதை படத்திலேயே வசனமாக வைத்திருப்பது சிறப்பு. இந்த மாதிரி படங்கள் இதற்கு முன் பல முறை வந்திருந்தாலும் இதுதான் ஃபர்ஸ்ட் என சொல்லப்படும் அளவுக்கு தெரிந்த கதையில் எங்கெல்லாம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும் காதலையும் கொட்ட முடியுமோ இயக்குநர் கொட்டித் தீர்த்து இருக்கிறார்.

முதல் பாதி நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், தேவையில்லாமல் இரண்டாம் பாதியில் வரும் அந்த பெங்களூரு போர்ஷனும் கன்னடர்கள், தமிழர்கள் பிரச்சனையும் இந்த படத்துக்கு எந்த இடத்திலும் கைகொடுக்காத நிலையில், இயக்குநர் அதை தவிர்த்து இருக்கலாம்...... 


கருத்துகள் இல்லை