சற்று முன்



நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு நான்கு மாதத்திற்குள் இரட்டைக் குழந்தை பிறந்தது எப்படி?.!!

 



சென்னை 09 அக்டோபர் 2022 நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு நான்கு மாதத்திற்குள் இரட்டைக் குழந்தை பிறந்தது எப்படி?.!!!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு வருடமாக காதலித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்கள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷாருக்கான் நடிகர் சூர்யா விஜய் சேதுபதி உள்ளிட்ட திரைப்பட உலக பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆனால் 2022 மார்ச் மாதமே ஒரு வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வீடியோவில் நடிகை நயன்தாரா வெற்றி வடுகில் குங்குமம் வைத்திருந்தார்.

ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என தம்பதியினர் முடிவெடுத்து இருந்தார்கள்.



மேலும் ஏற்கனவே நடிகை நயன்தாராவிற்கு 38 வயதாகி விட்டதால் இனிமேல் கருவுற்று குழந்தை பெறுவது கடினமான செயல் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாலு மாத கணக்குப்படி இன்று அக்டோபர் 9ஆம் தேதி நடிகர் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நாங்கள் தாய் தந்தை ஆகிவிட்டோம் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் தற்போது குழந்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போல் ஏற்கனவே பாலிவுட் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை