ஓராண்டிற்குள் இந்தியாவில் 14 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை – குளோபல் விட்னஸ் அறிக்கை
"ஒவ்வொரு வாரமும் உலகளவில் மூன்று பேராவது தங்களுடைய நிலத்தை, சுற்றுச்சூழலை, வெளிப்புற சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப் போராடியதற்காகக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று சொல்லலாம்.
ஆனால்,
இந்த எண்கள் எல்லாம், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீங்கள்
கேட்கும் வரை உண்மையாகாது.
இப்படி கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தால், சமூகத்தால் நேசிக்கப்பட்டவர்கள்.
அவர்களுடைய சொந்த நிலத்திற்காக மட்டுமின்றி, பூமியின் ஆரோக்கியத்திற்காகப்
போராடியவர்கள்."
கடந்த
செப்டம்பர் 29ஆம்
தேதியன்று வெளியான 2021ஆம் ஆண்டுக்கான குளோபல் விட்னஸ் எனும்
பன்னாட்டு அரசு சாரா அமைப்பின் அறிக்கையின் முன்னுரையில் சுற்றுச்சூழல்
செயற்பாட்டாளர் வந்தனா சிவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை